சச்சினின் கிரிக்கெட் பயிற்சியாளர் காலமானார்… வேதனையில் தவிக்கும் சச்சின்

மும்பை:
சச்சினின் கிரிக்கெட் பயிற்சியாளர் அச்ரேகர் காலமானார். இதனால் மிகுந்த வேதனையில் உள்ளார் சச்சின்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின், கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் விதால் அச்ரேகர் (86) மும்பையில் காலமானார்.

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையை செதுக்கியதில் அச்ரேக்கருக்கு முக்கிய பங்குண்டு. சச்சின் சிறுவனாக இருந்தபோது, மும்பையின் பல பகுதிகளில் நடக்கும் போட்டிகளுக்கு, சச்சினை, தனது ஸ்கூட்டரில் அழைத்து சென்று அச்ரேக்கர் பயிற்சியளித்து போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார்.

அந்த நன்றியை மறவாத சச்சின் டெண்டுல்கர், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தின் போதும், தவறாது, தனது கிரிக்கெட் குருவை பார்த்து ஆசி வாங்க தவறுவதில்லை. சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளித்த அச்ரேக்கரை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு 1990ம் ஆண்டு துரோணாச்சாரியார் விருதையும், 2010ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கி கவுரவித்தது.

அச்ரேக்கர் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த சச்சின், ‘குரு அச்ரேக்கர் முன்னிலையில் கிரக்கெட் ஒரு சொர்க்கம் போல் இருக்கும். அவரது பல மாணவர்களை போல, நானும் அவரிடம், கிரிக்கெட் குறித்த ‘ஏபிசிடி’ கற்றுக் கொண்டேன். எனது வாழ்வில் அவரது பங்களிப்பு குறித்து வார்த்தையால் விளக்க முடியாது. நான் நிற்பதற்கான அஸ்திவாரத்தை கட்டியவர் அவர்’, என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!