சச்சின் சாதனை முறியடிப்பு… நேபாள் கிரிக்கெட் வீரருக்கு பாராட்டுக்கள்
நேபாளம்:
சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் நேபாள் நாட்டின் கிரிக்கெட் வீரர் ரோஹித்.
உலகிலேயே மிகவும் இளம் வயதில் 50 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு 16 வயது 213 நாட்கள் கடந்திருந்தபோது பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 59 ரன்கள் அடித்தார்.
இந்த சாதனை கடந்த 28 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக அப்ரிடி இலங்கைக்கு எதிராக 16 வயது 217 நாட்களில் 50 எடுத்திருந்தார். இந்நிலையில், நேபாள நாட்டின் பேட்ஸ்மேன் ரோஹித் பவுடேல் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நேபாள அணி விளையாடி வருகிறது. இதில் ரோஹித் பவுடேல் 55 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார். அவருக்கு 16 வயது 146 நாட்கள்.
இதன் மூலம் மிகவும் இளம் வயதில் 50 ரன் எடுத்த வீரர் என்ற பெயர் ரோஹித்துக்கு கிடைத்துள்ளது. அவருக்கு ஐ.சி.சி. வாழ்த்து தெரிவித்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி