சச்சின் டெண்டுல்கர் மும்பையில் கிரிக்கெட் அகாடமியை தொடக்கினார்

கிரிக்கெட் பயிற்சி அகாடமி தொடக்கினார்… இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிக சதங்களை அடித்தவர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரரான சச்சின், கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது அவர், மும்பையின் மேற்கு பகுதியில் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட்தான் தமக்கு வாழ்க்கையில் அனைத்தையும் அளித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக கிரிக்கெட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அகாடமியை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

Sharing is caring!