சதம் விளாசிய ரோஹித் சர்மா…வெற்றியை நோக்கி இந்தியா !
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 106 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். இதில் 15 பௌண்டரிகள் அடங்கும்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவர் அடிக்கும் 3 -ஆவது சதம் இது என்பதும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடித்தும் 25 -ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, 36 ஓவர்களின் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்களை எடுத்து, இந்தியா வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடி வருகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S