சமூக வலைதளங்களில் வைரலாகும் சச்சினின் டுவிட்டர் வீடியோ!

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளின்போது, சில சமயம்பௌலர்கள் வீசும் பந்து, பேட்ஸ்மேனின் கண்களிலிருந்து தப்பி ஸ்டெம்பை தட்டிச் சென்றாலும், பைல்ஸ் கீழே விழவில்லையென்றால் அதன் காரணத்தால் பேட்ஸ்மேன் அவுட் இல்லை என்று நடுவர்கள் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி,  நடுவர்களின் இந்த முடிவு சரிதான் என்றாலும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த முடிவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், விமர்சகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு கிரிக்கெட் போட்டியில், பௌலர் வீசும் பந்து நேராக ஸ்டெம்பில் படுகிறது. ஆனால், ஸ்டெம்பின் மேல் வைக்கப்பட்டுள்ள பைல்ஸ் கீழே விழாததால், பேட்ஸ்மேன் அவுட் இல்லையென நடுவர் கூறுகிறார்.

தன்னுடைய நண்பர் ஒருவர் தமக்கு அனுப்பிய இந்த வீடியோவை, ரசிகர்களுடன் பகிர்வதாக தெரிவித்துள்ள சச்சின், நீங்கள் நடுவராக இருந்தால், இதற்கு அவுட் தருவீர்களா? இல்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். சச்சின் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Sharing is caring!