சர்ச்சைக்குள்ளான ஸ்பெயின் பயிற்சியாளர்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜூலென் லோப்டெகுவை ஸ்பெயின் நாட்டு கால்பந்து சங்கம் அதிரடியாக நீக்கியுள்ளது. உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பை உண்டாக்கியுள்ளது
ஜூலென் லோப் ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு செல்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியதாக கூறப்படுகிறது. உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் சர்ச்சை வெடித்தது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.
உலக கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடவில்லை.
குறிப்பாக 2வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்அவுட்டில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து 50 வயதான பெர்னாண்டோ ஹியரோ உடனடியாக விலகினார்.
ஏற்கனவே கவனித்து வந்த ஸ்போர்ட்டிங் இயக்குனர் பதவிக்கு திரும்பமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடி வருகிறார்கள்.