சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெறும் யுவராஜ் சிங்

2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாக பாரிய பங்காற்றிய சகலதுறை வீரரான யுவராஜ் சிங் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு முதல் 19 வருடங்களாக 402 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக யுவராஜ் சிங் விளையாடியுள்ளார்.

அதில் 17 சதங்கள் 71 அரைச்சதங்களுடன் 11778 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு இந்தியா சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கும் யுவராஜ் சிங் பாரிய பங்காற்றினார்.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசிய வீரரும் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்திலும் 2000 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணத்திலும் யுவராஜ் சிங் தொடரின் சிறந்த நாயனாக தெரிவானார்.

அத்துடன் அந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!