சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குயின்டன் டி கொக் மற்றும் பெப் டு பிளசிஸ் ஆகியோர் தலா 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

எனினும் சகலதுறை வீரரான ஜேபி டுமினி இறுதிவரை களத்தில் நின்று 53 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

Sharing is caring!