சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.

தம்புள்ளையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டிக்காக, இரு அணிகளின் வீரர்களும் நேற்றைய தினம் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாவது போட்டி தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி சீரற்ற வானிலை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்தப் போட்டி இன்று காலை 9 மணி முதல் சிரச மற்றும் டி.வி வன் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!