சர்வதேச ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம்

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை வழிநடத்திய ஏரோன் பின்ச் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

பெட் கம்மிங்ஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.

சகலதுறை வீரர்களான கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோருக்கு இந்தக் குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

டெஸ்ட் தொடரில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி பிரகாசித்து வரும் மார்னஸ் லபுசனேவுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மார்னஸ் லபுசனே இவ்வருடத்தில் மாத்திரம் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை குவித்த வீரராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!