சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஜந்த மெண்டிஸ் ஓய்வு

இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச அரங்கில் கால்பதித்த மெண்டிஸ், 19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

மெண்டிஸ் பங்குபற்றிய முதல் டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கத்து.

19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய அஜந்த மெண்டிஸ் 70 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 87 சர்வதேச ஒருநாள் போட்டியில் 152 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு 20 க்கு 20 கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த அஜந்த மெண்டிஸ் 39, 20 க்கு 20 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி 66 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு உபாதைகுள்ளான அஜந்த மெண்டிஸ், அதன்பின்னர் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!