சர்வதேச பதக்கம் வென்றவர்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை ; பழனி திகாம்பரம்

சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற லபுகலை தோட்டத்தினை சேர்ந்த ராஜகுமாருக்கும், ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வெலிஓயா தோட்டத்தினை சேர்ந்த சன்முகேஸ்வரனுக்கும் தனி வீடுகளை நிர்மாணிக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த ராஜகுமாரன் மற்றும் சண்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது ராஜகுமார் மிஸ்டர் மலையகம் (Mr. Malaiyagam) சன்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் (Horse of Malaiyagam) என பெயர் சூட்டி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான 7 பேர்ச் காணியில் 10 லட்ச ரூபா பெறுமதியான வீட்டினை நிர்மாணிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ராம், சரஸ்வதி சிவகுரு அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Sharing is caring!