சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்திய நட்சத்திர வீரர்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான ஓஜா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் ஓய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டார். அதில், இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஓஜா, இதுவரை இந்திய அணிக்காக 18 ஒருநாள் போட்டியில் விளையாடி 652 ஓட்டங்கள் எடுத்து, 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

24 டெஸ்ட் போட்டியில் விளையாடிவுள்ள ஓஜா, 3,420 ஓட்டங்கள் எடுத்து, 113 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் 7 முறை 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

6 டி-20 போட்டியில் 132 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் பிரக்யான் ஓஜா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Sharing is caring!