சாம்பியன் ஆனார் சிந்து… வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில்!!!

குவாங்சு:
சாம்பியன் ஆனார்… சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 21 – 19, 21 – 17 என, ஜப்பானின் ஒகுஹராவை தோற்கடித்தார்.

சீனாவின் குவாங்சு நகரில், உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர் – 6’ இந்தியாவின் சிந்து, 5வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹரா மோதினர்.

அபாரமாக ஆடிய சிந்து 21 – 19, 21 – 17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!