சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக ஹாக்கி அணி

சென்னை:
வென்றது… வென்றது… சாம்பியன் பட்டத்தை தமிழக ஹாக்கி அணி கைப்பற்றியுள்ளது.

சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் (‘பி’ டிவிசன்) தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 4-3 என்ற கோல் கணக்கில் மத்திய செயலகம் அணியை வென்றது.

சென்னையில் ஆண்களுக்கான 9வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் (‘பி’ டிவிசன்) தொடர் நடந்தது. இதில் பெங்கால், மத்திய பிரதேசம், கேரளா, பெங்களூரு, இந்திய விளையாட்டு ஆணையம் உள்ளிட்ட 41 அணிகள் பங்கேற்றன.

பைனலில் தமிழகம், மத்திய செயலகம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி ஆட்டநேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. தவிர பைனலுக்கு முன்னேறியதன் மூலம் தமிழக அணி, இத்தொடரின் ‘ஏ’ டிவிசன் பிரிவில் விளையாட தகுதி பெற்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!