சாய்னா அரையிறுதியில்….இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில்

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், அசத்தலாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆனால், பிவி சிந்து தோல்வியடைந்து நாக் அவுட் செய்யப்பட்டார்.

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா மற்றும் பிவி சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். காலிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை சாய்னா, தாய்லாந்து நாட்டின் சொச்சுவாங்குடன் மோதிய போட்டியில், 21-7, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். வெறும் 33 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், சாய்னா முழு ஆதிக்கம் செலுத்தினார். அடுத்ததாக அரையிறுதிப் போட்டியில், சாய்னா 6ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங்ஜியாவோவை சந்திக்கிறார்.

மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, ஒலிம்பிக் தங்கப் பதக்க வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினுடன் மோதினார். இந்த போட்டியில், முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடிய மரின், 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில், சிந்துவை நாக் அவுட் செய்தார்.

Sharing is caring!