சாய்னா பயோபிக்கின் ஹீரோயின் மாற்றம்!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஷரத்தா கபூர் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பரினீதி சோப்ரா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சினிமாவில் பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தில் சாய்னா நேவாலாக ஷரத்தா கபூர் நடித்து வந்தார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஹீரோயின் மாற்றப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷரத்தா கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

அவர் உடல்நிலை சரியான நிலையில், அவருக்கு பதிலாக பரினீதி நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் பூஷன் குமார் ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.

Sharing is caring!