சிக்ஸர் அடித்து இந்திய வீரர்களை வாய்பிளக்க வைத்த ஹிட்மர்..!!

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளின் இடது கை துடுப்பாட்டகாரர் ஷிம்ரான் ஹிட்மர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஹிட்மர் அபார ஆட்டத்தால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என வெற்றி கணக்கில் மேற்கிந்தி தீவுகள் முன்னிலையில் உள்ளது.

சென்னையில் நடந்த போட்டியில் தனது ஐந்தாவது ஒருநாள் சதத்தை அடித்த ஹிட்மர், 109 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என 139 ஓட்டங்கள் குவித்தார்.

போட்டியின் போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வீசிய 36 வது ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில், ஹிட்மர் 106 மீட்டர் சிக்ஸரை மைதானத்தின் கூரை மீது அடித்தார். அதை வாய்பிளந்து பார்த்த இந்திய வீரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

அதிரடி வீரர் ஹிட்மரை, 2019 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

Sharing is caring!