சிட்னியில் மிரட்டிய சச்சின் மகன் -சிறுவயதில் இருந்தே, வேகப்பந்து வீச பிடிக்கும்”

சிட்னியில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டியில், சச்சின் மகன் அர்ஜுன் ‘ஆல் ரவுண்டராக’ அசத்தினார்.

சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்தின் சார்பில், ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் குளோபல் சாலஞ்ச்’ தொடர் நடக்கிறது. இதில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்திய அணி சார்பில் களமிறங்கினார் இந்திய ‘ஜாம்பவான்’ சச்சின் மகன் அர்ஜுன். ‘ஆல் ரவுண்டரான’ இவர், ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக, ‘வேகத்தில்’ மிரட்டினார். 4 ஓவரில் 4 விக்கெட் சாய்த்த அர்ஜுன், பேட்டிங்கில் துவக்க வீரராக களமிறங்கிய 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார்.

இதுகுறித்து அர்ஜுன் கூறுகையில்,‘‘ சிறுவயதில் இருந்தே, வேகப்பந்து வீச பிடிக்கும். எதிர்காலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜொலிக்க முடியும் என, நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இதற்குத் தான் பற்றாக் குறை உள்ளது,’’ என்றார்.

Sharing is caring!