சின்சினாட்டி டைட்டிலை வென்றார் பெர்ட்டன்ஸ்

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலேப், சின்சினாட்டி ஓபன் டைட்டிலை கிகி பெர்ட்டன்ஸிடம் பறிகொடுத்தார்.

ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி ஓஹியோவில் நடைபெற்றது. நேற்று மகளிர் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் – 17ம் இடம் வகிக்கும் டச்சின் கிகி பெர்ட்டன்ஸை எதிர்கொண்டார். 2 மணி நேரப் போட்டியில் பெர்ட்டன்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற கணக்கில் ஹாலேப்பை வீழ்த்தினார்.

மேலும், பெர்ட்டன்ஸ் 10-வது முறையாக இந்த சீசனில், டாப் 10 போட்டியாளர்களை தோற்கடித்தார். தவிர, 6-வது டபிள்யுடிஏ டைட்டிலையும் பெர்ட்டன்ஸ் கைப்பற்றினார்.

Sharing is caring!