சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு; பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்

சிறந்த வீராங்கனை விருது… உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

உலக விளையாட்டு அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஆன்-லைன் மூலம் நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு ரசிகர்கள் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 477 வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

ஹாக்கி விளையாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய ராணி ராம்பால், இந்த விருதை ஹாக்கி சமூகத்துக்கும், இந்திய அணிக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.

Sharing is caring!