சி பிரிவு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில், அசாம் அணிக்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 56 ரன் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் (மனேந்தர் சிங் 101, லோம்ரர் 54); அசாம் 38.4 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் (பராக் 45, கேப்டன் சின்ஹா 52).* டிஐ சைக்கிள்ஸ் மைதானத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி, 2 ரன் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது.

பெங்கால் 267/8; ஜார்க்கண்ட் அணிக்கு விஜேடி விதிப்படி 49 ஓவரில் 263 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 49 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. * ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 102 ரன் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீர் அணியை வென்றது. சர்வீசஸ் 49 ஓவரில் 322 ரன்னுக்கு ஆல் அவுட் (கேப்டன் ரஜத் பலிவால் 63, நகுல் ஷர்மா 123); ஜம்மு 42.2 ஓவரில் 220 ஆல் அவுட் (பரஸ் ஷர்மா 93).* சி பிரிவில் 10 அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் ஜார்க்கண்ட் (22), சர்வீசஸ் (20), அரியானா (18), குஜராத் (18), தமிழகம் (16) முதல் 5 இடங்களில் உள்ளன.

Sharing is caring!