சுரேஸ் ரெஜ்னாவின் மெட்ராஸ் தின வாழ்த்து

மெட்ராஸ் டேவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையின் 379வது பிறந்த நாளான இன்று மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி பலரும் சென்னையுடன் தங்களுக்கு உள்ள உறவை நினைவுக்கூர்ந்து வருகின்றனர். கட்டிடங்கள், மெரினா என சென்னைக்கு என பல அடையாளங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சென்னையின் அசைக்க முடியாத அடையாளம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல்லின் ராஜாவாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மெட்ராஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

— Suresh Raina (@ImRaina) August 22, 2018 

அந்த பதிவில், “மெட்ராஸ் தின வாழ்த்துக்கள். இது அன்பு, திறமை மற்றும் துடிப்பை கொண்ட நகரம். அங்கு அற்புதமான நினைவுகளை பெற்றதையும் மெட்ராஸ் மக்களுடன் நல்ல உறவில் இருந்ததையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!