செத்த கிளிக்கு எதற்கு சிங்காரம்?

32 வயதான ஷரபோவா கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபனில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டில் காயம் காரணமாக அவதிப்பட்ட அவர், தரவரிசையில் 147வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனால் வரும் 20ம் திகதி தொடங்கும் அவுஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் நேரடியாக கலந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி அமைப்பாளர்கள் ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கியுள்ளனர். இதனால் ஷரபோவா நேரடியாக பிரதான சுற்றில் கலந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செத்த கிளிக்கு எதற்கு சிங்காரமென ஒரு சொலவடையுண்டு. அதே பாணியில், நெட்டிசன்கள், அவுஸ்திரேலிய ஓபன் அமைப்பாளர்களை கலாய்த்து வருகிறார்கள்.

Sharing is caring!