சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி!

கோவாவில் இன்று நடைபெற்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்தியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியானது, நேற்று கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமலே நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். ஆனால் சென்னை அணி மேற்கொண்ட அனைத்து கோல் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் முதல்பாதி நேர ஆட்டம் முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதனையடுத்து 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் கொல்கத்தா அணியின் எடு கார்சியா, 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதனால் சென்னை அணியின் மீது அதிகபாரம் விழுந்தது. தொடர்ந்து, ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னையின் வீரர் வால்ஸ்கிஸ் முதல் கோலை பதிவு செய்து அசத்தினார்.

இதனால் ஆட்டம் சூடு பிடிக்க துவங்கினாலும், சென்னையின் கோல் அடிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடங்களில் சென்னை அணி கோல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து அணியை 3-1 என்கிற முன்னிலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அடுத்த வழங்கப்பட்ட கூடுதலான 2 நிமிடங்களில் சென்னை அணி மீண்டும் கோல் அடிக்க தவறியதால், ஆட்டநேர இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Sharing is caring!