சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே சென்னை வீரர் தீபக் சாஹருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது மற்றோருவர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி துடுப்பாட்டகாரர் ருத்துராஜ் கெயிக்வாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ருத்துராஜ் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும், கொரோனா இல்லை என உறுதியாகி 24 மணிநேரத்திற்கு பின்னரே வீரர்கள் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது இரண்டு வீரர்களுக்கு கொரோனா உறுதியானது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!