செம கோபம்… ஜெயசூர்யா மீது ஐசிசி செம கோபம்…!

துபாய்:
செம கோபத்தில் உள்ளது ஐ.சி.சி. யார் மீது? எதற்காக தெரியுங்களா? இதை படிங்க.

இலங்கை கிரிக்கெட் அணி தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யா. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணி தேர்வுக்குழு தலைவராக 2013 முதல் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் பதவியில் இருந்தார்.

இந்நிலையில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. ஆனால் இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தல், முக்கிய ஆவணங்களை அழித்தல் போன்ற வேலைகளை செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் ஜெயசூர்யா மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!