சேலை கட்டிக்கொண்டு சீனாக கிரிக்கெட் விளையாடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன்!

2002 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு அயராது உழைத்தவர் மித்தாலி ராஜ். மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே 6000 ரன்கள் எடுத்தவர் இவர்தான். ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக ஏழு முறை அரை சதமடித்த ஒரே பெண் மித்தாலி ராஜ். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நகரத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டனான வளர்ந்த இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகள் அளித்து பெருமைப்படுத்தியது.

2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து இவர் ஓய்வுப் பெறப்போவதாக இவர் அறிவித்தார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் பிரபல நடிகையான தாப்ஸீயை வைத்து திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் சேலை கட்டிக்கொண்டு சீனாக கிரிக்கெட் விளையாடுவதுப்போல் ஒரு விடியோவை இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்றுவரும் மகளிர் அணிகளுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றிற்கு இந்திய அணி தகுதிப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்க்கொள்கிறது. அவர்களை வாழ்த்தும் விதமாக இங்வத விடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!