ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு அட்வைஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் வீட்டுக்கு திரும்புமாறு, அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து, பிரிட்டன், ஜெர்மன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் மற்றும் பிற ஊழியர்களை ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேறி, தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து, இர்பான் பதான், பாதுகாப்பு அதிகாரிகளால் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் வீடு திரும்பவுள்ளார்.

Sharing is caring!