ஜெஃப்ரி வென்டர்சேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை

இலங்கை கிரிக்கெட் வீரரான ஜெஃப்ரி வென்டர்சேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் விஜயத்தின் போது ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட காரணத்தால் அவருக்கு இந்தத் தடை விதிப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது வருடாந்த ஒப்பந்தக் கொடுப்பனவில் 20 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!