டிஎன்பிஎல் டி20ல் இன்று கில்லீஸ் – வாரியர்ஸ் மோதல்.

ஷடிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் களமிறங்கி உள்ளன.

திருநெல்வேலியில் நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ் அணி, இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.15க்கு தொடங்குகிறது.

Sharing is caring!