டிரிபிள் ஜம்ப் போட்டி… இந்தியாவிற்கு தங்கம்

ஜகார்த்தா:
டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டி மற்றும் மகளிர் ஹெப்டதலான் பிரிவுகளில் இந்தியா தங்கம் வென்றது.
இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இதில் ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டி நடந்தது. இதில் அர்பிந்தர் சிங் 16.77 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதே போட்டியில் பங்கு கொண்ட இந்தியாவின் ராகேஷ்பாபு 6-வது இடத்தை பிடித்தார்.

மகளிர் ஹெப்டதலான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!