டில்லி டெஸ்ட்: இந்திய பவுலர்கள் ஏமாற்றம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின், 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றி வருகின்றனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், இந்தியா 1–0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும கடைசி டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (57), கேப்டன் சண்டிமால் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த மாத்யூஸ், கேப்டன் சண்டிமால் ஜோடி, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். பொறுப்பாக ஆடிய சண்டிமால், அரைசதமடித்தார்.

உணவு இடைவேளையின் போது, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (90), சண்டிமால் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

Sharing is caring!