டி – 20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 49 ரன்களும், பூரான் 20 ரன்களும்எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும், வந்த வேகத்திலேயும் பெவிலியன் திரும்பினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி, 16 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆறு விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 24 ரன்களும், மணீஷ் பாண்டே, விராட் கோலி ஆகியோர் 19 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sharing is caring!