டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை ரிலீஸ்

புதுடில்லி:
டி 20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

7-வது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் நாள் வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

உலககோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளில் ஆஸ்திரேலியா அணியை தவிர, ஐசிசி தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர்.

மீதமுள்ள 2 அணிகள் குவாலிபயர் சுற்றில் பங்கேற்கும். இதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் குவாலிபயர் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர். மேலும் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறாமல், வெவ்வேறு பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்த உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதவில்லை. ‘A’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து. ‘B’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான்.

இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்: அக்டோபர் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா. அக்டோபர் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2). நவம்பர் 1 : இந்தியா- இங்கிலாந்து. நவம்பர் 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1) நவம்பர் 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.

கடந்த 2007-ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை  அறிமுகப்படுத்தியது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!