டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நியூசிலாந்து:
ஒரு நாள் தொடரை கைப்பற்றியது போல் இன்று நடக்கும் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று (6ந் தேதி) நடக்கிறது.

பேட்டிங்கில் தவான், தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும், பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வரிசையில் இருக்கும் ஹர்த்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

வில்லியம்சன், கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!