டென்னிஸ் தரவரிசையில் ரஃபேல் நடால் முதலிடம்

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

32 வயதான நடால், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இரண்டாம் இடத்தில் தொடர்கிறார். விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஜோகோவிச் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீரர்கள்:

ரஃபேல் நடால் (ஸ்பெயின்) – 9310 புள்ளிகள்

ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து) – 7080 புள்ளிகள்

அலெக்ஸாண்டர் ஸிவேரெவ் (ஜெர்மன்) – 5665 புள்ளிகள்

டெல் போட்ரோ (அர்ஜென்டினா) – 5395    புள்ளிகள்

ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) – 4655 புள்ளிகள்

டிமிட்ரோவ் (பல்கேரியா) – 4610 புள்ளிகள்

மரின் சிலிக் (குரோவேஷியா) – 3905 புள்ளிகள்

டோமினிக் தியம் (ஆஸ்திரியா) – 3665 புள்ளிகள்

ஜோஷ் இஸ்னர் (அமெரிக்கா) – 3490    புள்ளிகள்

நோவக் ஜோகோவிச் (செர்பியா) – 3355 புள்ளிகள்

Sharing is caring!