டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் நடால், ஹாலேப் நீடிப்பு

ரோஜர்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடாலிடம் தோல்வி கண்ட ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாஸ், புதிய டென்னிஸ் தரவரிசையில் டாப் 20க்குள் நுழைந்துள்ளார்.

அண்மையில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், புதிய டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறார். நடாலிடம், தனது பிறந்தநாளன்று தோல்வி கண்ட ஸ்டெபானோஸ் (20), 15-வது இடத்திற்கு முன்னேறினார்.

159-வது இடம் வகித்த ஸ்டெபானோஸ், ஒரு வருடத்திற்கு முன், டொமினிக் தியம், ஜோகோவிச், ஸ்வேரெவ், ஆண்டர்சன் ஆகியோரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

மகளிர் பிரிவில், ரோஜர்ஸ் கோப்பையை வென்ற ரோமானியாவின் சிமோனா ஹாலேப் முதலிடத்தில் நீடிக்கிறார். கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும், ஹாலேப்பிடம் வீழ்ந்த ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.

Sharing is caring!