டென்னிஸ் போட்டியில் 100வது சாம்பியன் பட்டம் கைப்பற்றிய ரோஜர்

துபாய்:
டென்னிஸ் போட்டியில் 100வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் ரோஜர் பெடரர்.

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஏடிபி டென்னிஸ் அரங்கில் தனது 100வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பைனலில் அவர், கிரீஸ் வீரர் டிசிட்சிபாசை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி துபாய் ஓபனில் 8வது முறையாக பட்டம் வென்றார். அமெரிக்க வீரர் ஜிம்மி கானர்ஸ் அதிகபட்சமாக 109 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!