டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரோடு ஓய்வு

இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரோடு ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இவர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இது தொடர்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

77 வருடங்களில் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் பிரித்தானிய வீரர் ஆண்டி முர்ரே என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!