டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் அஸ்வின் இடம்பெறுவது சந்தேகம் என தெரிகிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை வென்ற நிலையில் ஒருநாள் போட்டிகளில் சொதப்பியது.

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பீல்டிங், பந்துவீச்சு, டாப் ஆர்டர் பேட்டிங் என பல பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

எனவே டெஸ்ட் தொடரில் இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்காக பயிற்சி போட்டியை பயன்படுத்தும் நோக்கத்தில் இந்திய அணி இருப்பதாலும், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டும் அணியில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது.

உத்தேச அணியில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அஸ்வின் ரஞ்சி தொடரில் கலந்து கொண்டு ஆடினார். அடுத்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்தியா ஏ அணியிலும் அவர் இடம் பெற்றார். அதில் அவர் அதிக விக்கெட்கள் வீழ்த்தவில்லை.

மறுபுறம் ஜடேஜா டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இரண்டிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார்.

எனவே, ஜடேஜாவுக்கு தான் டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம், ஒருவேளை அஸ்வின் சிறப்பாக செயல்பட்டால் அவர் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய உத்தேச அணி – விராட் கோஹ்லி, மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, அஜின்க்யா ரஹானே, விரிதிமான் சாஹா, ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, ஷுப்மன் கில்

Sharing is caring!