டெஸ்ட் அணியில் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 0–4 என இழந்தது. இதன்பின், 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் முடிந்தபின், நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணி 5 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. இரண்டாவது போட்டி மார்ச் 30ல் கிறைஸ்ட்சர்ச்சில் துவங்கும். இதற்கான, 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாய்ப்பு: இதில், ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். கடந்த செப்டம்பரில் மது போதையில் மற்றொரு நபருடன் சாலையில் இவர் மோதலில் ஈடுபட்டார். இதனால், வழக்குபதியப்பட்டதால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்கிடைக்கவில்லை. இதற்கான விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், மீண்டுஸ் ஸ்டோக்சிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி, காயத்திலிருந்து மீண்டுள்ள மார்க் வுட், மொயீன் அலி, வின்சி, ஸ்டோன்மேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல, ஜோ ரூட் அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், பிராட், அலெஸ்டர் குக், கிரேன், போக்ஸ், லிவிங்ஸ்டோன், மாலன், ஓவர்டன், ஸ்டோக்ஸ், ஸ்டோன்மேன், வின்சி, வோக்ஸ், மார்க் வுட்.

Sharing is caring!