டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதை செய்த ஒரே வேகப்பந்து வீச்சாளர்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது.

இதில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.

இது அவருக்கு 150-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்களில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 149 போட்டிகளில் 575 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜேம்ஸ் அறிமுகம் ஆனார்.

சமீபத்தில் ஆஷஸ் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெக்ராத் (563 விக்கெட்கள்) 124 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸின் வால்ஷ் (519 விக்கெட்கள்) 132 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!