டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்திய அணி

பெங்களூரு:
அசத்தல் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி டெஸ்ட் போட்டியில். எப்படி தெரியுங்களா?

பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார சாதனை செய்துள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர். 2வது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்த அணி, 103 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!