டேவிட் சில்வா சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஸ்பெயினின் நடுகள வீரர் டேவிட் சில்வா, சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

32 வயதான மான்செஸ்டர் சிட்டி வீரர் டேவிட் சில்வா, 2010ம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார். தவிர, 2008, 2012 ஐரோப்பியா சாம்பியன்ஷிப் போட்டியில் முக்கிய புள்ளியாக இருந்தார்.

சில்வா தனது தேசிய அணிக்காக 12 வருடங்களில், 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்துள்ளார். முன்னாள் பயிற்சியாளர் விசேன்ட், சில்வாவை ஸ்பெயினின் லியோனல் மெஸ்ஸி என்று அழைப்பார்.

ஸ்பெயினின் அண்ட்ரெஸ் இனியெஸ்டா மற்றும் ஜெரார்ட் பியூவை தொடர்ந்து, டேவிட் சில்வா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Sharing is caring!