டொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர் !

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி வீரர் என்ற சாதனையை, அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இன்று தட்டிச் சென்றார். லண்டன், லாட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இம்ரான் தாஹிர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் -உல் -ஹக்கின் விக்கெட்டை  தாஹிர் வீழ்த்தினார். இந்த விக்கெட்டையும் சேர்த்து, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இம்ரான் தாஹிர் மொத்தம் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதையடுத்து, வேர்ல்டுகப் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த தென்னாப்பிரிக்க அணி வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனாலட், உலகக்கோப்பை போட்டியில் 38  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதே இதுவரை அந்த அணி அளிவில் சாதனையாக இருந்து வந்தது.

மொத்தம் 25 போட்டிகளில் டொனால்ட் 38 விக்கெட்டுகளை எடுத்திருக்க, 19 போட்டிகளிலேயே 39 விக்கெட்டுகளை வீழ்த்தி, இம்ரான் தாஹிர் டொனால்டின் சாதனையை இன்று முறியடித்துள்ளார்.

Sharing is caring!