டோனியின் தீவிர ரசிகர் ஒருவர் டோனி மீது வைத்திருந்த வெறித்தனமான அன்பை எப்படி வெளிப்படுத்தினர் தெரியுமா?? நீங்களே பாருங்க!

தமிழகத்தில் டோனியின் தீவிர ரசிகர் ஒருவர் டோனி மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை தன்னுடைய வீட்டின் பெயிண்டிங் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரெங்கசாமி-விஜயா. இவர்களுக்கு கோபிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

கோபிகிருஷ்ண்ன், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட நிலையில், அதன் பின் டோனியின் தீவிர ரசிகராக மாறினார்.

தற்போது ,ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ்சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

அதன்படி இவர் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ஹோம் ஆப் டோனி என எழுதியுள்ளார்.

இதனை பார்த்த சுற்று வட்டார கிராம மக்கள் கிரிகெட் வீரருக்கான தனது வீட்டையே மாற்றிய கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.

Sharing is caring!