டோனி மட்டும் கேப்டன் கூல் இல்ல இவரும் கேப்டன் கூல் தான்! கோஹ்லி தூக்கிட்டு இவர போடுங்க: நாசன் ஹுசைன் ஓபன் டாக்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மாவை, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசஹுசைன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி ரோகித் தலைமையிலான அணி அசத்தி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசன் ஹுசைன், ரோகித் சர்மாவும் ஒரு கேப்டன் கூல் தான். அவர் ஒரு ஜென்டில்மேன்.

ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் ஆகிய அனைவரையும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கிறார். என்னை பொறுத்தவரை டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி ரோகித் இடம் விட்டு கொடுக்க சரியான தருணம் இதுவாக நினைக்கிறேன்.

ரோகித் சர்மா ஒரு திறமைவாய்ந்த துடுப்பாட்ட வீரராக, டி20 போட்டியிலும் அவரால் விரைவாக ஓட்டங்களை குவிக்க முடியும். இறுதிப்போட்டியில் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றாலும் சிறப்பாக விளையாடினார் என்று கூறினார்.

Sharing is caring!