தகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி

2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிச் சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் துர்க்மேனிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிச்சுற்று இந்நாட்களில் நடைபெறுகின்றது.

இதன் ஒரு போட்டியில் இலங்கை மற்றும் துர்க்மேனிஸ்தான் அணிகள் மோதின.

முதல் பாதியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் துர்க்மேனிஸ்தான் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தான் வீரர்கள் மற்றுமொரு கோலை போட்டனர்.

இலங்கை அணி வீரர்களால் போட்டி முழுவதும் கோலடிக்க முடியவில்லை.

அதன்படி இந்தப்போட்டியில் 2 – 0 என்ற கோல் கணக்கில் துர்க்மேனிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிச்சுற்றில் இலங்கை அணி H குழுவில் இடம்பெற்றிருந்தது.

முதல் சுற்றில் இலங்கை அணி பங்கேற்ற 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!