தகுதி….ஆசிய கிண்ண கரப்பந்தாட்டம்…இலங்கை கால் இறுதியில்…

ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில் இந்தோனேசியாவை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இந்த சிறப்பைப் பெற்றது.

ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் சீன தாய்பேயின் அனுசரணையில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் துறைமுக அதிகார சபை அணி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில் இலங்கை அணியும் இந்தோனேசியாவும் ​மோதின.

போட்டியின் முதல் மூன்று சுற்றுக்களையும் இலங்கை அணி வீரர்கள் 20 – 25, 25 – 22 மற்றும் 26 – 24 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.

கடைசி இரண்டு சுற்றுக்களையும் 26 – 24 மற்றும் 15 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வீரர்கள் கைப்பற்றினர்.

இந்த வெற்றிக்கு அமைவாக, ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் காலிறுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணி வீரர்கள் பெற்றார்கள்.

இந்தத் தொடரில் இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த வருடத் தொடரிலும் இலங்கை அணி காலிறுதிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஈரானை எதிர்த்தாடவுள்ளது.

Sharing is caring!